“மோடி அரசின் 8வது பட்ஜெட்” : சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்குமா?

 

“மோடி அரசின் 8வது பட்ஜெட்” : சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்குமா?

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

“மோடி அரசின் 8வது பட்ஜெட்” : சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்குமா?

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் சரிவைக் கண்டுள்ளது. நிதி பற்றாக்குறை, கடன் உள்ளிட்டவை இந்த முறை அதிகமாகவே காணப்படுகிறது. அதேசமயம் சிறு குறு தொழில்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கூடுதல் சலுகை வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இப்படியான மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

“மோடி அரசின் 8வது பட்ஜெட்” : சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்குமா?

இந்த முறை வரி விகிதத்தில் மாற்றம் இருக்காது எனவும் அதே சமயம் செலவுகள் அதிகரித்துள்ளதால் அதை சமாளிக்கும் வகையில் அதிக வருவாய் பிரிவினருக்கு கோவிட் செஸ் என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.அதேபோல் சுகாதாரம் , கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளுக்கு இம்முறை கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இல்லாதது போல் முதல் முறையாக காகிதம் இல்லாத வகையில் மின்னணு வடிவில் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. இதனால் பட்ஜெட் உரையை கம்ப்யூட்டரை பார்த்து நிதியமைச்சர் படிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னணு திரையில் பட்ஜெட் தகவல்கள் காண்பிக்கப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.