பட்ஜெட் 2021-22: மதுரை டூ கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு தொடக்கம்!

 

பட்ஜெட் 2021-22: மதுரை டூ கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு தொடக்கம்!

மத்திய பட்ஜெட் 2021-22 அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார். சாலை மேம்பாட்டு திட்டங்கள் குறித்த உரை பின்வருமாறு:

பட்ஜெட் 2021-22: மதுரை டூ கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு தொடக்கம்!

தமிழ்நாட்டில் 1.03 லட்சம் கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

2022ஆம் ஆண்டுக்குள் 8,500 கிமீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

11 ஆயிரம் கிமீ நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்

கேரளாவில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 55 ஆயிரம் கோடி ரூபாயும், மேற்கு வங்கத்தில் 95 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கேரளாவில் 1100 கி.மீ, மேற்கு வங்கத்தில் 675 கி.மீ, அஸ்ஸாமில் 1,300 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

மொத்தமாக 1,18, 101 கோடி ரூபாய் சாலைவழிப் பயணம் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.