• August
    24
    Saturday

Main Area

Main



மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை

புத்தர்
புத்தர்
Loading...
elephant

"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது.  போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன். 
ஒரு நாள்! போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான். 

elephant

அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், 'அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்திருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான். 
அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்த கதையை தன் மகனுக்கு சொன்ன புத்தர், கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும். தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியமில்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்தி வீண் பேச்சு பேசுவதைத் தவிர்த்தால் தான் தீமையில் இருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மனதில் மாசு இருந்தால் தான் நாக்கு பொய் பேசும். கண்டதைச் சொல்லி திரியும்.  

budhar

மனதை அடக்காமல் நாம் நமது நாக்கை மட்டும் அடக்குவதால் ஒரு நன்மையும் இல்லை’ என்றார் புத்தர்.

2018 TopTamilNews. All rights reserved.