ராமரைத் தொடர்ந்து புத்தரும் சர்ச்சையில்… இந்தியாவுக்கு நேபாளம் கண்டனம்!

ராமரைத் தொடர்ந்து புத்தரும் சர்ச்சையில்… இந்தியாவுக்கு நேபாளம் கண்டனம்!

ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்று நேபாள பிரதமர் ஒளி சர்ச்சையை கிளப்பினார். தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் புத்தர் இந்தியர் என்று கூறியதன் மூலம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ராமரைத் தொடர்ந்து புத்தரும் சர்ச்சையில்… இந்தியாவுக்கு நேபாளம் கண்டனம்!
இந்தியா, நேபாளம் என்று நாடுகள் உருவாவதற்கு முன்பு தோன்றியவர்கள் ராமரும், புத்தரும் ஆனால் அவர்கள் தங்கள் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்க இந்தியா, நேபாளம் முயற்சி செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ராமரைத் தொடர்ந்து புத்தரும் சர்ச்சையில்… இந்தியாவுக்கு நேபாளம் கண்டனம்!
ராமர் பிறந்த இடம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி இல்லை என்று நேபாள பிரதமர் ஒளி பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட இந்து கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தொிவித்தன. இந்த நிலையில் இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பு நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசும்போது, “இரண்டு மகா இந்தியர்களில் ஒருவர் புத்தர், மற்றொருவர் மகாத்மா காந்தி” என்று கூறியிருந்தார்.

ராமரைத் தொடர்ந்து புத்தரும் சர்ச்சையில்… இந்தியாவுக்கு நேபாளம் கண்டனம்!
இதற்கு நேபாள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து கூறுகையில், “வரலாற்று ரீதியாகவும், தொல்லியல் ஆதாரங்கள் அடிப்படையிலும் கவுதம புத்தர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ள லும்பினிதான். லும்பினிதான் புத்தத்தின் ஊற்றுக்கண். யுனெஸ்கோ பாரம்பரிய இடமாகவும் திகழ்கின்றது. இவை எல்லாம் மறுக்க முடியாத உண்மைகள்” என்று கூறியுள்ளது.
அங்குள்ள அரசியல் கட்சிகள் ஜெய்சங்கருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேபாளத்தில் பிறந்த புத்தரை எப்படி ஜெய்சங்கர் இந்தியர் என்று கூறலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஜெய்சங்கரின் பேச்சு அந்நாட்டில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.