அவருக்கு சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம்… அகிலேஷ் யாதவை கிண்டலடித்த மாயாவதி

அவருக்கு சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம்… அகிலேஷ் யாதவை கிண்டலடித்த மாயாவதி

சமாஜ்வாடி கட்சியின் செயல்படும் பாணி மற்றும் தலித் எதிர்ப்பு சித்தாந்தம் ஆகியவற்றால்தான் சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு அந்த கட்சியின் அகிலேஷ் யாதவ் தள்ளப்பட்டுள்ளார் என்று மாயாவதி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான தற்போதைய பா.ஜ.க.வின் ஆட்சி வரும் மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது. இதனால் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பா.ஜ.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகின்றன.

அவருக்கு சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம்… அகிலேஷ் யாதவை கிண்டலடித்த மாயாவதி
அகிலேஷ் யாதவ்

2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மயாவாதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் கட்சிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனை மனதில் வைத்து எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் மட்டுமே சமாஜ்வாடி கூட்டணி வைக்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். அதேசமயம் உத்தர பிரதேச தேர்தலில் எங்க கட்சி தனித்து போட்டியிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி அறிவித்தார்.

அவருக்கு சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம்… அகிலேஷ் யாதவை கிண்டலடித்த மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி

இந்நிலையில் மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியின் செயல்படும் அணுகுமுறை மற்றும் தலித் எதிர்ப்பு சித்தாந்தம் காரணமாக முக்கிய கட்சிகள் அந்த கட்சியை விலக்கி வைத்துள்ளன. இதனால் சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு அகிலேஷ் யாதவ் தள்ளப்பட்டுள்ளார். அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருக்கு சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம்… அகிலேஷ் யாதவை கிண்டலடித்த மாயாவதி
பா.ஜ.க.

அண்மையில் டைம்ஸ் நவ்-சி வோட்டர் இணைந்து உத்தர பிரதேச மக்களிடம் ஒரு கருத்து கணிப்பை மேற்கொண்டது. அந்த கருத்து கணிப்பின், 2020 உத்தர பிரதேத தேர்தலில் பா.ஜ.க. 289 இடங்களில் வெற்றி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2016 தேர்தலை காட்டிலும் 36 இடங்கள் குறைவாகும். அதேசமயம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி 59 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் வெற்றி கனியை பறிக்கும் என தெரிகிறது.