தடுப்பூசியில் அரசியல் பண்ணாதீங்க… பா.ஜ.க. அரசுக்கு அட்வைஸ் பண்ணும் மாயாவதி கட்சி..

 

தடுப்பூசியில் அரசியல் பண்ணாதீங்க… பா.ஜ.க. அரசுக்கு அட்வைஸ் பண்ணும் மாயாவதி கட்சி..

தடுப்பூசியல் அரசியல் பண்ணாதீங்க என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதுமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். முன்னதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்துக்கு மத்திய அரசு குறைவாக தடுப்பூசி அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தடுப்பூசியில் அரசியல் பண்ணாதீங்க… பா.ஜ.க. அரசுக்கு அட்வைஸ் பண்ணும் மாயாவதி கட்சி..
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதிந்திர படோரியா கூறுகையில், தடுப்பூசியில் இந்த வகையான அரசியல் செய்யக்கூடாது. பா.ஜ.க. ஆளும் மாநிலம் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தாலும் அனைவரையும் அவர்கள் (மத்திய அரசு) சமமாக நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

தடுப்பூசியில் அரசியல் பண்ணாதீங்க… பா.ஜ.க. அரசுக்கு அட்வைஸ் பண்ணும் மாயாவதி கட்சி..
சுதிந்திர படோரியா

மேலும், படோரியா பேசுகையில், கொரோனா வைரஸ் நெருக்கடி இந்திய மக்களையும், உலகத்தையும் கடுமையாக பாதித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது என்பதையும், அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வறுமைகோட்டை சுற்றி வாழ்கின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் முன்னுரிமையுடன் சிகிச்சையளிக்க தகுதியானவர்கள். அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இதனால் இந்தியா ஒரு தேசமாக ஒன்றாக முன்னேறி வளர்ச்சிடைய முடியும் என்று தெரிவித்தார்.