எந்த தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு என் கட்சி சொல்லவே இல்லை… மாயாவதி

 

எந்த தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு என் கட்சி சொல்லவே இல்லை… மாயாவதி

எந்தவொரு தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு எனது கட்சி சொல்லவே இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியின் தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, எதிர்வரும் எம்.எல்.சி. தேர்தல்களில், அவள் அல்லது அவன் பா.ஜ.க. அல்லது எந்தவொரு கட்சியை சேர்ந்த யாருக்கும் நாங்கள் எங்களுக்கு வாக்குகளை அளிப்போம் என்று நான் கூறியிருந்தேன். இதர கட்சியை சேர்ந்த எந்தவொரு வேட்பாளரை நாங்கள் ஆதரிக்க முடியும். ஆனால் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை வெற்றி பெற விடமாட்டோம்.

எந்த தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு என் கட்சி சொல்லவே இல்லை… மாயாவதி
மாயாவதி

முஸ்லிம் மக்களை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிக்கவும். இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம் வாக்களிக்காமல் பார்த்து கொள்வதற்கும், காங்கிரசும், சமாஜ்வாடியும் தங்களது சொந்த நலனுக்கான என்னுடைய அறிக்கையை மோசடி செய்கின்றன. எந்தவொரு தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு வாக்குளிக்குமாறு நான் வேண்டுகோள் விடுவிக்கவில்லை.

எந்த தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு என் கட்சி சொல்லவே இல்லை… மாயாவதி
காங்கிரஸ், சமாஜ்வாடி

பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைத்தபிறகும் பகுஜன்சமாஜ் கட்சி மாநிலத்தில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடக்க அனுமதிக்கவில்லை. அதேவேளையில் காங்கிரஸ்-சமாஜ்வாடி ஆட்சியின் போது மாநிலத்தில் மதகலவரங்கள் நடந்தன. 1995ல் நான் மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது, மதுராவில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வினர் முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்த முயற்சி செய்தபோது நான் அதனை அனுமதிக்கவில்லை அதனால் எனது அரசாங்கம் கவிழ்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.