”புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் + டேட்டா ரோல் ஒவர் வசதி” – பிஎஸ்என்எல் திட்டம் !

 

”புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் + டேட்டா ரோல் ஒவர் வசதி” – பிஎஸ்என்எல் திட்டம் !

பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.999 மற்றும் ரூ.798 ஆகிய கட்டணங்களில் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெலிகாம் டாக் என்ற பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, பிஎஸ்என்எல் நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், போஸ்ட் பெய்ட் திட்டங்களில் சில மாற்றங்களையும், சில புதிய கட்டண திட்டங்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போதுள்ள 199 ரூபாய் திட்டத்தில் டேட்டா ரோல்ஒவர் வசதியை ஏற்படுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

”புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் + டேட்டா ரோல் ஒவர் வசதி” – பிஎஸ்என்எல் திட்டம் !

மேலும், சில கட்டண திட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்கு பதிலாக, 798 ரூபாய் மற்றும் 999 ரூபாய்க்கு புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதில் 798 ரூபாய் கட்டண திட்டத்தில் மாதத்திற்கு 50ஜிபி டேட்டாவும், 150 ஜிபி வரை ரோல்ஒவர் செய்துகொள்ளும் வசதியுடன் தினமும் 100 எஸ்எம்எஸ்களும், இரண்டு குடும்ப உறுப்பினர்களின் நம்பர்களை இணைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கும் என தெரிகிறது.

”புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் + டேட்டா ரோல் ஒவர் வசதி” – பிஎஸ்என்எல் திட்டம் !

இதேப்போல, 999 ரூபாய் திட்டத்தில் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவும், 225 ஜிபி வரை டேட்டாவை ரோல்ஒவர் செய்துகொள்ளும் வசதியும் இருக்கும் என்றும், அளவற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களின் நம்பர்களை இணைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய போஸ்ட்பெய்ட் கட்டண திட்டங்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமல் படுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்