ரூ.49க்கு 2ஜிபியுடன் 100 நிமிட இலவச அழைப்புகள்- புதிய திட்டம் – பிஎஸ்என்எல் அறிமுகம்

ரூ.49க்கு 2ஜிபியுடன் 100 நிமிட இலவச அழைப்புகள்- புதிய திட்டம் – பிஎஸ்என்எல் அறிமுகம்

ரூ.49க்கு 2 ஜிபி டேட்டா,100 நிமிடங்களுக்கான இலவச அழைப்புடன் கூடிய பிரிபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.49க்கு 2ஜிபியுடன் 100 நிமிட இலவச அழைப்புகள்- புதிய திட்டம் – பிஎஸ்என்எல் அறிமுகம்

இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இருக்கும் என்றும், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை கவர, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் பிஎஸ்என்எல், வரும் நவம்பர் 29ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்றும் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

ரூ.49க்கு 2ஜிபியுடன் 100 நிமிட இலவச அழைப்புகள்- புதிய திட்டம் – பிஎஸ்என்எல் அறிமுகம்

இலவச அழைப்புகளுக்கு பிறகு நிமிடத்திற்கு 45 காசுகள் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்த பிரீபெய்ட் திட்டத்தை சி-டாப்அப், செல்ப்கேர் அல்லது வலைதளத்தின் மூலமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் 1499 ரூபாய்க்கு வருடாந்திர திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் தினமும் 250 நிமிட இலவச அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதற்கும் மொத்தம் 24 ஜிபி டேட்டாவை பெறலாம் என்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.முத்துக்குமார்