பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் துரோகிகள்… பா.ஜ.க எம்.பி பேச்சால் சர்ச்சை!

 

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் துரோகிகள்… பா.ஜ.க எம்.பி பேச்சால் சர்ச்சை!

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் எல்லோரும் துரோகிகள், 88 ஆயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களை வேலையைவிட்டுத் தூக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க எம்.பி-யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் துரோகிகள்… பா.ஜ.க எம்.பி பேச்சால் சர்ச்சை!
கர்நாடக மாநில பா.ஜ.க எம்.பி-யாக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. சர்ச்சைக் கருத்துக்களை சொல்லி தலைப்புச் செய்தியில் இடம் பிடிப்பது இவரது பாணி. மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவி ஏற்று, ஒரு சில நாட்களில் ராஜினாமா செய்தபோது, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை எல்லாம் மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி கொடுத்துவிட்டார், இனி கவலையில்லை என்று கூறினார். இது பா.ஜ.க வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் துரோகிகள்… பா.ஜ.க எம்.பி பேச்சால் சர்ச்சை!
இந்த நிலையில் வடக்கு கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியில் அனந்த குமார் ஹெக்டே பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், “பி.எஸ்.என்.எல் நிறுவனம் துரோகிகளின் சூழ்ச்சியால் தோல்வியடைந்துள்ளது. அவர்களைப் பற்றி மிகச்சரியான வார்த்தையை நான் பயன்படுத்தியுள்ளேன். பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ல் இருந்து 88 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். தற்போதைய நிலையில் பிரதமர் மோடியால் கூட பி.எஸ்.என்.எல் எதிர்கொண்டிருக்கும் பிரச்னையை சமாளிக்க முடியவில்லை.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் துரோகிகள்… பா.ஜ.க எம்.பி பேச்சால் சர்ச்சை!
அரசு நிதியை ஒதுக்குகிறது. மக்களுக்கு சேவை தேவைப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு உள்ளது. ஆனாலும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை செய்வது இல்லை. பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா பற்றி பேசுகிறார், அதற்காக நிதியை ஒதுக்குகிறார். ஆனால் இவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. இதை சரி செய்ய பி.எஸ்.என்.எல்-ஐ தனியார் மயமாக்க வேண்டும். நாட்டின் கரும்புள்ளியாக பி.எஸ்.என்.எல் உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்றார்.