ஜம்முவில் பாக். எல்லையில் 50 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு… பயங்கரவாதிகளைத் தேடும் போலீஸ்

ஜம்முவில் பாக். எல்லையில் 50 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு… பயங்கரவாதிகளைத் தேடும் போலீஸ்

காஷ்மீரில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் யாராவது நுழைந்துள்ளார்களா என்று தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஜம்முவில் பாக். எல்லையில் 50 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு… பயங்கரவாதிகளைத் தேடும் போலீஸ்

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு அருகே சம்பா செக்டார் பகுதியில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை ஒன்றை இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய – பாகிஸ்தான் எல்லை வேலிப் பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இதன் நுழைவாயிலிருந்தது. ஒருவர் தவழ்ந்தபடி வரும் வகையில் அந்த சுரங்கப் பாதை உள்ளது. அதன் மறு முணை பாகிஸ்தானில் உள்ளது. அங்கு எவ்வளவு தூரத்தில் இருந்து சுரங்கம் தோண்டப்பட்டு வந்துள்ளது என்பது தெரியவில்லை. சுரங்கம் இடிந்து விடாமல் இருக்க பிளாஸ்டிக் பைகளை வைத்து முட்டுக் கொடுத்துள்ளனர். இதை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உருவாக்கியிருக்கலாம் என்று எல்லை பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஜம்முவில் பாக். எல்லையில் 50 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு… பயங்கரவாதிகளைத் தேடும் போலீஸ்

மேலும் இந்தியா – பாகிஸ்தான் எல்லை முழுவதும் வேறு சுரங்கப் பாதைகள் ஏதும் உள்ளதா என்றும் தேடி வருகின்றனர். இந்த பாதை வழியாக பயங்கரவாதிகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை வழியாக யாராவது இந்தியாவுக்குள் வந்தார்களா என்றும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எல்லைப் பகுதி மாநிலங்களின் உளவுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.