ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

 

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் நிகர லாபம் ரூ.32.48 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21.4 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தை நிகர லாபமாக ரூ.41.32 கோடி ஈட்டியிருந்தது.

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

2020 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் வருவாய் ரூ.162.11 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தை வருவாயாக ரூ.165.97 கோடி ஈட்டியிருந்தது. வருவாய் குறைந்தது லாப சரிவுக்கு முக்கிய காரணம்.

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

மும்பை பங்குச் சந்தையின் வருவாய் மற்றும் லாபம் கடந்த ஜூன் காலாண்டில் சரிவு கண்டுள்ளபோதிலும், மும்பை பங்குச் சந்தையில் பங்கு பிரிவில் நடைபெறும் தினசரி வர்த்தகத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையில் பங்கு பிரிவில் தினந்தோறும் சராசரியாக ரூ.3,724 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,683 கோடியாக இருந்தது.