Home அரசியல் "ஜூலை 26-க்கு பிறகே முடிவு தெரியும்" - முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பகீர் தகவல்!

“ஜூலை 26-க்கு பிறகே முடிவு தெரியும்” – முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பகீர் தகவல்!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியில் அவரது மகன் விஜயேந்திராவின் தலையீடு இருப்பதாகக் கூறி பாஜக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க பிளான் போடுகிறார்கள். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். அமைச்சர்களில் சிலர் எடியூரப்பாவை வெளிப்படையாகவே ஊடகங்களில் அவரை விமர்சிக்கின்றனர்.

"ஜூலை 26-க்கு பிறகே முடிவு தெரியும்" - முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பகீர் தகவல்!
As pressure mounts on BS Yediyurappa, here are BJP's frontrunners for next  Karnataka CM - India News

இதனிடையே மகனுடன் டெல்லி விரைந்தார் எடியூரப்பா. அங்கு சென்ற அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்தித்தார். சந்திப்பிற்குப் பின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று கூறி திட்டவட்டமாக மறுத்திருந்தார். இச்சூழலில் நேற்று முன்தினம் லிங்காயத் மடாதிபதிகளை சந்தித்தார். மடாதிபதிகளுடன் தனக்கு இருக்கும் ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

Karnataka: CM BS Yediyurappa meets PM Narendra Modi, several Union  Ministers; discusses state issues

அவரின் இந்நகர்வு தன்னை பதவியிலிருந்து தூக்க ஸ்கெட்ச் போட்ட ஆர்எஸ்எஸ், பாஜக தலைமைக்கு மறைகமுக விடுத்த சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மாநிலத்தின் மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவு இச்சமூகத்தில் இருக்கிறது. ஆகவே அதே சமூகத்தைச் சேர்ந்த தனக்கு மதத் தலைவர்களின் ஆதரவு இருப்பதாக டெல்லி தலைமைக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனிடையே அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஜூலை 26ஆம் தேதியோடு ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது.

Lingayat Monks, Leaders Demand BS Yediyurappa Remains As Chief Minister

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள எடியூரப்பா, “ஜூலை 26ஆம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதன்பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதனை நான் கட்டாயமாகப் பின்பற்றுவேன். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே எனது தலையாய பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

"ஜூலை 26-க்கு பிறகே முடிவு தெரியும்" - முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பகீர் தகவல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே...

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பலர் தங்களது வேலையை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கிடைத்த வேலைக்கு...

இடஒதுக்கீடு உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் ராமதாஸ் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம்...

அந்த லிங்க்கை தொட்டால்… வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் – போலீஸ் எச்சரிக்கை!

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் புழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இது பல மோசடிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் பெருகியுள்ளன. இந்த...
- Advertisment -
TopTamilNews