மீண்டும் லாக்டவுன் வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்க… பெங்களூரு மக்களை எச்சரித்த முதல்வர் எடியூரப்பா

மீண்டும் லாக்டவுன் வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்க… பெங்களூரு மக்களை எச்சரித்த முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்நகரில் பல பகுதிகள் சீல்வைக்கப்பட்டு அந்த பகுதியில் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மீண்டும் லாக்டவுன் வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்க… பெங்களூரு மக்களை எச்சரித்த முதல்வர் எடியூரப்பா

விரைவில் பெங்களூரு நகர் முழுவதும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் என்ற பேச்சு பரவலாக அடிப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், பெங்களூருவில் மற்றொரு லாக்டவுன் அல்லது சீல் வைத்தல் வேண்டாம் என்றால் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒத்துழைப்பு கொடுங்க என அந்நகர மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மீண்டும் லாக்டவுன் வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்க… பெங்களூரு மக்களை எச்சரித்த முதல்வர் எடியூரப்பா

முதல்வர் பி.எஸ். எடியூரப்பா இன்று பெங்களூருவில் உள்ள அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார். அந்த சந்திப்பின்போது கொரோனா வைரஸ் நிலவரம், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தொடர்பாக அவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை செய்ய உள்ளார். கர்நாடக துணை முதல்வர் அஷ்வத்நாராயணன் நேற்று பேட்டி ஒன்றில், மீண்டும் லாக்டவுனை நடைமுறைப்படுத்தினால் மக்கள் கடுமையான பிரச்சினை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் மற்றும் மீண்டும் லாக்டவுன் விதிப்பது தொடர்பாக கேள்விகள் எழுவில்லை என தெரிவித்தார்.