“பாபா பெயரில் போதை ” சாய் பாபா பிரசாதம் கொடுக்கிறேன்னு எத கொடுத்தாங்க பாருங்க

 

“பாபா பெயரில் போதை ” சாய் பாபா பிரசாதம் கொடுக்கிறேன்னு எத கொடுத்தாங்க பாருங்க

சாய்பாபா கோவில் பிரசாதம் என்று பாக்கெட்டுக்குள் பிரவுன் சுகர் அடைத்து விற்று பணம் சம்பாதித்த ஒரு நபரை போலீசார் கைது செய்தார்கள்

“பாபா பெயரில் போதை ” சாய் பாபா பிரசாதம் கொடுக்கிறேன்னு எத கொடுத்தாங்க பாருங்க

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் கிளேரி என்பவர் பெங்களூருவில் உள்ள பலருக்கு நூதனமான முறையில் போதை பொருட்களை கடத்தி வந்து கர்நாடக மாநிலம் முழுவதும் வழங்கியுள்ளார் .
அவர் குஜராத்திலிருந்து பிரவுன் சுகர் என்ற போதை பொருளை சாய்பாபா பிரசாதம் என்று கூரியரில் பெற்று அதை பேருந்துகளிலும் ,பார்சல் சர்வீஸிலும் அதை பிரசாதம் என்றே பலருக்கு அனுப்பி பணம் சம்பாதித்துள்ளதை போலீசார் கண்டறிந்தனர் .
இந்த கிலேறி என்பவர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கூலி வேலைக்கு பெங்களூருக்கு வந்து இப்படி புதிய முறையில் பிரவுன் சுகர் போதை பொருளை பாக்கெட் செய்து விற்று வந்துள்ளார் ,பல மாதங்களாக இப்படி சாய்பாபாபா பிரசாதம் என்ற போர்வையில் இவர் அங்குள்ள பல தொழிலதிபர்கள் மற்றும் மாணவர் களுக்கு வழங்கி பணம் சம்பாதித்துள்ளதை போலீசார் கண்டறிந்தனர் .இவரிடம் இப்படி போதை பவுடரை ரெகுலராக வாங்கும் வாடிக்கையாளர்களின் விலாசத்தையும் போலிசார் சேகரித்து வருகிறார்கள் .மேலும் இந்த நெட்ஒர்க்கை பிடிக்க போலீசார் குஜராத்துக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் தலை மறைவாகிவிட்டார்கள் .ஆனால் இந்த கூட்டத்தை விரைவில் பிடிப்போமென்றும் ,இந்த நெட்ஒர்க் மூலம் கர்நாடக மாநிலத்தில் பிரவுன் சுகர் விற்கும் இன்னும் பலரை தேடி வருவதாகவும் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார் .இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் ஹெல்மெட்டுக்குள் இந்த பிரவுன் சுகர் வைத்து விற்றும் ,பேருந்துகளில் பிரசாதம் போர்வையில் விற்றும்வருவதாகவும் மக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்

“பாபா பெயரில் போதை ” சாய் பாபா பிரசாதம் கொடுக்கிறேன்னு எத கொடுத்தாங்க பாருங்க