‘கொரோனாவிலிருந்து மைத்துனர் மீண்டார். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ நடிகர் விவேக் ட்விட்

 

‘கொரோனாவிலிருந்து மைத்துனர் மீண்டார். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ நடிகர் விவேக் ட்விட்

கொரோன வைரஸ் சீனாவில் தொடங்கினாலும் இன்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனா பாதிப்பிலிருந்து மீள திணறிக்கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனித உடலுக்குள் செலுத்தி வெற்றிகரமாக பயன் அளிக்கிறது என்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

‘கொரோனாவிலிருந்து மைத்துனர் மீண்டார். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ நடிகர் விவேக் ட்விட்

இந்தியாவில் மார்ச் மாத மத்தியிலிருந்து கொரோனா தீவிரமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாம் இடத்தில் டெல்லியும் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்குத் தனியார் மருத்துவமளைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பாதிப்புள்ள நோயாளிகளில் பெரும்பாண்மையோர் அரசு மருத்துவனைகளில்தான் சிகிச்சை பெற்றுவருகின்றனர். முழு குணம் பெற்றும் நலமடைவோர் சதவிகிதம் அதிகரித்துவருவதும் ஆரோக்கியமான தகவல்களே. சென்னையிலும் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. ஆயினும் ஆயிரத்துக்கும் கீழே குறைய வில்லை என்பது கவனிக்கத் தக்கது.

‘கொரோனாவிலிருந்து மைத்துனர் மீண்டார். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ நடிகர் விவேக் ட்விட்

இந்த நிலையில் நடிகர் விவேக், தனது மைத்துனர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதற்கு அரசு மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி ட்விட் செய்திருக்கிறார்.

அவரது ட்விட்டில், ‘எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டவர்களையும் டேக் செய்திருக்கிறார். இது அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.