கறிக்கோழி விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது! கறிக்கோழி வளர்ப்போர் தரும் அதிர்ச்சி

 

கறிக்கோழி விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது! கறிக்கோழி வளர்ப்போர் தரும் அதிர்ச்சி

கறிக்கோழி விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது என்று கறிக்கோழி வளர்ப்போர் அதிர்ச்சி செய்தியை அறிவித்தார்கள்.

திண்டுக்கல் கறிக்கோழி வளர்ப்பு நலச்சங்க செயலாளர் ரபிக் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சுமுக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு’’கோழி பண்ணை விவசாயிகள் ஆகிய நாங்கள் பல வருடங்களாக கம்பெனி கோழிகளை வளர்த்து கொடுத்து வந்துள்ளோம். அதற்கான வளர்ப்பு தொகையையும் பெற்று வந்துள்ளோம். மேலும் வளர்ப்புத் தொகை தற்போதைய சூழ்நிலையில் போதவில்லை எனவும் அத்தொகையை உயர்த்தி தர வேண்டி தனித்தனியாக பலமுறை கோரிக்கை வைத்தும் நிறுவனங்கள் கண்டுகொள்ளாததால் தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது’’என்று தெரிவித்துள்ளனர்.

கறிக்கோழி விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது! கறிக்கோழி வளர்ப்போர் தரும் அதிர்ச்சி

மேலும், ’’நஷ்டத்தினால் பல பண்ணைக் கோழி வளர்ப்போர் தொழிலில் இருந்து விலகி சென்றுவிட்டனர். பலர் தங்கள் வங்கி மூலமாகவும் தனியார் மூலமாகவும் பெற்ற கடனை திரும்பி செலுத்த முடியாத நிலையில் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கம் அமைத்து பண்ணைக் கோழி உற்பத்தியாளர்களின் கஷ்டங்களை வகைப்படுத்தி கோரிக்கைகளாக கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பி தொடர்ந்து வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரிக்கைகளை வைத்து இருந்தோம். அதற்கு எவ்வித தீர்வும் ஏற்படாத நிலையில் வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் இறுதி அறிவிப்பாக 25-10-2020 முதல் பண்ணைகளில் கோழிக்குஞ்சுகளை இறக்கவில்லை. மேலும் 01-11-2020 முதல் கோழி ஏற்ற நிறுவனங்கள் சார்பில் அலுவலர் வரும்போது, பண்ணை விவசாயிகள் கோழி வளர்த்து கொடுக்க கிலோவிற்கு ரூ.12 செலவு ஏற்படுகிறது’’என்று குறிப்பிட்டுள்ளனர்.

’’ செலவு தொகையை கொடுத்த பின்பு தான் கோழி ஏற்ற அனுமதிப்பது என திண்டுக்கல் மாவட்ட கறி கோழி பண்ணையாளர்கள் நல சங்கம் மற்றும் தென்மாவட்ட கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி அறிவித்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் தீர்வு ஏற்படவில்லை. எனவே பண்ணை விவசாயிகள் மேற்கண்ட நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது எங்களுக்கான சட்டப்பாதுகாப்பு வழிமுறைகளையும் சுமுகமான தீர்வையும் ஏற்படுத்தி தர மாவட்ட சட்டம் ஒழுங்கு நிர்வாக பொறுப்பில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் சம்பற்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி விவசாயிகளுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் வழிமுறைகளை ஏற்படுத்தி தருமாறு’’ மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கறிக்கோழி விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது! கறிக்கோழி வளர்ப்போர் தரும் அதிர்ச்சி

இதுகுறித்து திண்டுக்கல் கறிக்கோழி வளர்ப்பு நலச்சங்க செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ திண்டுக்கல் மாவட்டத்தில் 800 கறிக்கோழி வளர்ப்போரும் தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி வளர்ப்பு உள்ளனர் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்து கறிக்கோழி வளர்த்து தருவதில்லை எனவும், தற்போது தாங்கள் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கறிக்கோழி விலை ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடும். ஆட்டுக்கறி 1500 க்கு மேல் விற்கும் நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவர்.

மேலும் தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் ஆளும் அதிமுக அரசுக்கு கெட்ட பெயரும் நெருக்கடியும் ஏற்படக்கூடும். இதனால் இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கறிக்கோழி நிறுவனங்களுக்கும் கறிக்கோழி வளர்ப்போருக்கும் இடையே சுமுகமான தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’என்றனர்.

கறிக்கோழி விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரப்போகிறது! கறிக்கோழி வளர்ப்போர் தரும் அதிர்ச்சி