darbar
  • January
    18
    Saturday

Main Area

Main



வயித்துல கத்தி வச்சு தச்சிருக்காங்க கேள்விபட்டிருக்கோம், வாவ் இட்ஸ அ மெடிக்கல் மிராக்கிள்!

Dentures in throat
Dentures in throat

இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகர மருத்துவமனைக்கு 72 முதியவர் ஒருவர், இருமல் வரும்போது ரத்தம் வருவதாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும், உணவை விழுங்குவது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக சில சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு ஒன்றும் பெரிதாக பிடிபடவில்லை. அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட்டிருக்கின்றன.

Patient with delicate complaints

எதற்கும் இருக்கட்டு, பில் பண்ணும்போது கூடுதல் தொகை வரும் என நினைத்து தொண்டைக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி. நோயாளியின் தொண்டையில் முழு பல் செட் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது. என்னங்க இது வாயில இருக்கவேண்டியது, தொண்டையில இருக்கு என முதியவரிடம் விசாரித்தபோது, ஓ, இது இங்கதான் இருக்குதா, ஒரு வாரமா இதைத்தான் தேடிகிட்டு இருந்தேன் டாக்டர் என்றிருக்கிறார். மேலும், ஒரு வாரத்துக்கு முன்பு  தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும், தவறுதலாக அவரது பல் செட் உள்ளே வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

2018 TopTamilNews. All rights reserved.