தூள் கிளப்பிய பிஸ்கட் வியாபாரம்…. ரூ.498 கோடி லாபம் பார்த்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்….

தூள் கிளப்பிய பிஸ்கட் வியாபாரம்…. ரூ.498 கோடி லாபம் பார்த்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்….

2020 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.498.13 கோடி ஈட்டியுள்ளது.

பிஸ்கட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.498.13 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.2 சதவீதம் அதிகமாகும்.

தூள் கிளப்பிய பிஸ்கட் வியாபாரம்…. ரூ.498 கோடி லாபம் பார்த்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்….
பிரிட்டானிய தயாரிப்புகள்

கடந்த காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வரி செலவினம் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. அது அந்நிறுவனத்தின் லாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.3,419.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12.1 சதவீதம் அதிகமாகும்.

தூள் கிளப்பிய பிஸ்கட் வியாபாரம்…. ரூ.498 கோடி லாபம் பார்த்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்….
வருண் பெர்ரி

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறுகையில், முந்தைய காலாண்டில் நாங்கள் கண்ட செயல்திறன் ஆதாயங்களில் பெரும்பகுதியை தக்கவைத்து கொண்டோம், விநியோக சப்ளை செயல்திறன், கழிவுகள் மற்றும் நிலையான செலவினங்களை குறைத்தல். இந்த நடவடிக்கைகள் எங்களது வணிகத்தின் அமைப்பை தொடர்ச்சியாக நிலை நிறுத்தவும், கடந்த ஆண்டின் காலாண்டைக் காட்டிலும் செயல் லாபத்தில் அதிகரிப்பை பதிவு செய்யவும் எங்களுக்கு உதவியது என தெரிவித்தார்.