பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.360 கோடி… வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி

 

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.360 கோடி… வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.360.1 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.360.1 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.3 சதவீதம் குறைவாகும். 2020 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.372.3 கோடி ஈட்டியிருந்தது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.360 கோடி… வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

2021 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.3,130.7 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9.2 சதவீதம் அதிகமாகும். மேலும் 2021 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் விற்பனை 8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.360 கோடி… வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறுகையில், ஆண்டு கடினமான மற்றும் சவாலானதாக ஒவ்வொரு வழியிலும் உள்ளது. பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், வருவாய் லாபத்தன்மை மேம்பாடு மற்றும் சந்தை பங்கு ஆதாயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் நல்ல முடிவுகளை வழங்க முடிந்தது என தெரிவித்தார்.