லாக்டவுன் காலத்திலும் பிஸ்கட் வியாபாரம் அமோகம்.. ரூ.545.70 கோடி லாபம் ஈட்டிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

லாக்டவுன் காலத்திலும் பிஸ்கட் வியாபாரம் அமோகம்.. ரூ.545.70 கோடி லாபம் ஈட்டிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அந்த காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.545.70 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 117 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ரூ.251.03 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுன் காலத்திலும் பிஸ்கட் வியாபாரம் அமோகம்.. ரூ.545.70 கோடி லாபம் ஈட்டிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

லாக்டவுன் காலத்திலும் இந்நிறுவனத்தின் வலுவான வருவாய் மற்றும் செயல்பாடு வளர்ச்சி கண்டதே லாபம் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். 2020 ஜூன் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 26.7 சதவீதம் அதிகரித்து ரூ.3,420.67 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் உள்நாட்டு விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது.

லாக்டவுன் காலத்திலும் பிஸ்கட் வியாபாரம் அமோகம்.. ரூ.545.70 கோடி லாபம் ஈட்டிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் கூறுகையில், தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மையின் மாறும் தன்மையை கருத்தில் கொண்டு, விநியோக சங்கிலி செயல்திறன்களை பயன்படுத்துதல், கழிவுகளை குறைத்தல் மற்றும் நிலையான செலவினங்களின் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக செலவு செயல்திறனை விரைவாக செயல்படுத்தினோம். மேலும் அதிக சந்தை தேவை காரணமாக சரக்குகள் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு ஊடக செலவினங்களை மேற்கொண்டோம். இந்த நடவடிக்கைகள் கடந்த காலாண்டில் எங்களது வர்த்தக வடிவத்தை மேம்படுத்தவும், செயல்பாட்டு லாபத்தை பெரிய அளவில் அதிகரிக்கவும் உதவியது என தெரிவித்தார்.