தமிழகம் முழுவதும் பரவும் ‘கத்தரிக்காய்’ போராட்டம்

 

தமிழகம் முழுவதும் பரவும் ‘கத்தரிக்காய்’ போராட்டம்

ஏழைகளின் காய் எனப்படுகிறது ‘கத்தரிக்காய்’.. காரணம் இதன் விலை எப்பொழுதுமே மலிவாக இருக்கும். வறட்சியையும் தாங்கி வளரும் என்பதால் இதன் உற்பத்தியும் பாதிக்காது.இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 8 சதவீதப் பங்கைக் கொண்டிருக்கிறது கத்தரிக்காய் இந்தியாவில் இதனை நம்பி இருக்கும் விவசாயிகள் கோடிப் பேர்..

தமிழகம் முழுவதும் பரவும் ‘கத்தரிக்காய்’ போராட்டம்


இந்த நிலையில் மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரியை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும் தாவரவியல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இவற்றுக்கு ‘’ஜனத்’ மற்றும் ‘பி.எஸ்.எஸ்.-793’ என்று பெயரிடப்பட்டுள்ளது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை கத்தரி விதைகளை கர்நாடகம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களில் பரிசோதனை செய்திட கள ஆய்வுக்கு மத்திய அரசும், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவும் அனுமதி அளித்துள்ளன.நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரி கள ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பரவும் ‘கத்தரிக்காய்’ போராட்டம்


பி.டி. கத்தரிக்காய் மரபணு மாற்றப்பட்டு இருப்பதால், பூச்சிகள் தாக்காது. அதிக விளைச்சல் தரும் என்றெல்லாம் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சூழலியல் நிபுணர்கள், அதிக தண்ணீர் உறிஞ்சுவது, காட்டமான பூச்சிக் கொல்லிகள் தேவைப்படுவது, புதிய வகை பூச்சிகள் உருவாவது, உயிரியல் சூழல் பாதிக்கப்படுவது என்று பல காரணங்கலை விளக்கிச் சொல்லி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மரபணு கத்தரிக்காய் என்பது “பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்” என்னும் பாக்டீரியத்தின் மரபணுவைக் கொண்டு கத்தரிக்காயின் மரபணுவை மாற்றிப் புதிய விதை உருவாக்கப்பட்டது ஆகும். இது பாக்டீரிய கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஹைபிரிட் கத்திரிக்காய் பெரிய அளவில் மெழுகு பொம்மை போல் இருக்கும், இதுபோல்தான் தக்காளி, முட்டைகோஸ், வெங்காயம், வெண்டைக்காய், குடை மிளகாய் போன்றவைகளை உருவாக்குகிறார்கள். இது அழகாக இருந்தாலும் மக்கள் ஆரோக்கியத்தை குறைத்து விடும் என்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் பரவும் ‘கத்தரிக்காய்’ போராட்டம்

அமெரிக்காவின்’ மான்சான்ட்டா’ நிறுவனம்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரி, உள்ளிட்டவற்றின் விதைகளை ஆய்வின் மூலம் உருவாக்கி, உலக நாடுகளில் அவற்றை அறிமுகம் செய்து, அதற்கான சந்தையைப் பிடிக்குள் வைத்துக்கொள்ள முனைந்து உள்ளது.அது கத்தரிக்காய் உற்பத்தியையும், சந்தையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது என்கிறார்கள்
இதற்கிடையே இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை அடுத்து நிறுத்திவைக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரிக்காய் ஏற்கெனவே வங்கதேசத்தில் அனுமதிக்கப்பட்டுத் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத் தக்கது. அங்கு 66 சதவீத உழவர்கள் மிக மோசமான அனுபவமே கிடைத்ததாகக் கூறியுள்ளனர். ‘மீண்டும் இந்த விதையைப் பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு 68 சதவீதம் பேர் இல்லை என்றே பதிலளித்துள்ளனர்.எனவே மரபணு கத்தரிக்காய் பயிரிடுவதால் விவசாயிகள் எந்த பயனும் அடையப்போவதில்லை என்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் பரவும் ‘கத்தரிக்காய்’ போராட்டம்


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மரபணு கத்தரிக்காய்க்கு எதிராக போரட்டங்கள் கிளம்பியுள்ளன. கோவையில் நடந்த போராட்டத்தின் போது மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் ஒரு மனுக் கொடுத்துள்ளனர். அதில்: மரபணு கத்திரிக்காய் வகைகளை ஆய்வு செய்ய மாநில அரசு அனுமதிக்கக் கூடாது இந்தக் கத்திரிக்காய்களை நடுவதால், பாரம்பரிய கத்திரிக்காய் செடிகளை நடுவது சாத்தியமில்லாமல் போய் விடும். இது விவசாயிகளையும் மக்களையும் பெரிதும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.