அம்மை நோய்க்கு அருமருந்து, கத்தரிக்காய்!

 

அம்மை நோய்க்கு அருமருந்து, கத்தரிக்காய்!

கத்தரிக்காய்… இந்த பேரைக்கேட்டாலே பலபேர் முகம் சுளிப்பாங்க. ஆனால், கத்தரிக்காயில் உள்ள சத்துகள், அதன் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்தால் இனிமேல் கத்தரிக்காயை யாரும் வெறுக்க மாட்டோம். கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்னு ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நீண்டநாட்கள் மறைத்துவைக்க முடியாது. எப்பேர்ப்பட்ட ரகசியமாக இருந்தாலும் ஒருநாள் அது வெளிப்பட்டுவிடும் என்பதே அந்த பழமொழியின் பொருள்.

அம்மை நோய்க்கு அருமருந்து, கத்தரிக்காய்!கத்தரிக்காய்:
கத்தரிக்காயை கத்திரிக்காய் என்றே பலரும் அழைக்கிறார்கள். காரணம் கத்தரி என்றால் கத்தரித்தல் என்று பொருள்படும் என்பதால் கத்திரிக்காய் என்கிறார்கள். பொதுவாக கத்தரிக்காய் என்றே பேச்சுவழக்கில் எல்லோரும் அழைக்கிறோம்.

கத்தரிக்காயில் பலவகைகள் இருக்கின்றன. ஆனாலும் பச்சை, வெள்ளை, ஊதா நிறங்களில் கிடைக்கும் கத்தரிக்காய்கள்தான் பரவலாகக் கிடைக்கின்றன. சிறியதும், பெரியதுமாகக் கிடைக்கும் இவை ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. பொதுவாக விதை பிடிக்காத முற்றாத கத்தரிக்காய்கள்தான் சமையலுக்கு ஏற்றது, மருத்துவக் குணம் நிறைந்தது. ஆனாலும் முற்றிய கத்தரிக்காய்கூட மருந்தாகப் பயன்படுகிறது.

அம்மை நோய்க்கு அருமருந்து, கத்தரிக்காய்!
அம்மை:
அம்மை நோய்க்கு முற்றிய கத்தரிக்காய்தான் மருந்து. முற்றிய கத்தரிக்காயை நன்றாக தீயில் சுட்டு அதனுடன் ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயைச் சுட்டுப் பிசைய வேண்டும். கூடவே சின்ன வெங்காயம், புளி, உப்பு சேர்த்துப்பிசைந்து சாப்பிட்டால் அம்மை நோய் தீவிரமடையாது. அம்மை பாதித்தவர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலுள்ள மற்றவர்களும் இந்த முற்றிய கத்தரிக்காயில் செய்த கலவையை உண்ணலாம். அம்மை பாதிக்காதவர்கள் சாப்பிட்டால் அவர்களுக்கு இந்நோய் தாக்காது.

பித்த வாந்தி, பித்த கிறுகிறுப்பு உள்ளவர்கள் தினமும் கத்தரிக்காயை சமைத்துச் சாப்பிடலாம். அதேபோல் ஜலதோஷம் பிடித்து நெஞ்சில் கபம் கட்டியிருந்தால் அதை வெளியேற்ற தினமும் கத்தரிக்காயில் சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு என விதம்விதமாக செய்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

அம்மை நோய்க்கு அருமருந்து, கத்தரிக்காய்!மலச்சிக்கல்:
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பச்சைப்பருப்பு எனப்படும் பாசிப்பருப்பை கத்தரிக்காய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை வராது. ஆனால், உடலில் சொறி, சிரங்கு உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது.