கு.க.செல்வம் மாதிரி இல்லாம எல்லோருக்கும் தெரிந்த ஆளா கூட்டிட்டு வாங்க… தமிழக பா.ஜ.க-விடம் கடுகடுத்த டெல்லி!

கு.க.செல்வம் மாதிரி இல்லாம எல்லோருக்கும் தெரிந்த ஆளா கூட்டிட்டு வாங்க… தமிழக பா.ஜ.க-விடம் கடுகடுத்த டெல்லி!

தி.மு.க, அ.தி.மு.க-வில் உள்ள தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆன தலைவர்களை அழைத்து வரும்படி தமிழக பா.ஜ.க-விடம் டெல்லி தலைமை கடுகடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றதும் விருப்பம் உள்ள எல்லோரையும் பா.ஜ.க-வில் சேர்த்து வருகிறார். தேடப்படும் குற்றவாளிகள்

கு.க.செல்வம் மாதிரி இல்லாம எல்லோருக்கும் தெரிந்த ஆளா கூட்டிட்டு வாங்க… தமிழக பா.ஜ.க-விடம் கடுகடுத்த டெல்லி!

முதல், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை பலரும் பா.ஜ.க-வில் இணைந்துகொண்டே செல்கின்றனர். இவ்வளவு பயங்கர குற்றவாளிகளை எல்லாம் கட்சியில் சேர்க்கிறார்களே, தமிழகத்தில் பெரிய கலவரம் செய்யத் திட்டமா என்று பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் என்று தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை எல்லாம் பா.ஜ.க இழுத்துவருகிறது. இன்னும் பலர் பா.ஜ.க-வில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அப்பா – மகன் – மருமகன்

கு.க.செல்வம் மாதிரி இல்லாம எல்லோருக்கும் தெரிந்த ஆளா கூட்டிட்டு வாங்க… தமிழக பா.ஜ.க-விடம் கடுகடுத்த டெல்லி!

கூட்டணியை சமாளிக்க முடியாமல் பலரும் வெளியேறத் தயாராகவே உள்ளனர். அதற்கு பதில் நல்ல கவனிப்பை எதிர்பார்க்கின்றனர்.
இப்படி கவனிப்பை எதிர்பார்க்கும் தலைவர்கள் பட்டியலை தமிழக பா.ஜ.க டெல்லி தலைமையிடம் வழங்கியதாம். எல்லாம் சின்ன சின்ன அளவில், மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத தலைவர்களாக இருக்கவே டெல்லி தலைமை கடுப்பாகிவிட்டதாம்.
தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரிஞ்ச ஆளா பாருங்க… தி.மு.க, அ.தி.மு.க-வில் இருந்து வரும் அந்த நபர் சொன்ன தமிழக மக்கள் கேட்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அவர்களை வைத்து திராவிட அரசியலுக்கு எதிரா பேசும் போது மக்கள் அதை நம்பவேண்டும். அப்படியான ஆளை கூட்டிட்டு வாங்க” என்று கூறிவிட்டார்களாம்.

கு.க.செல்வம் மாதிரி இல்லாம எல்லோருக்கும் தெரிந்த ஆளா கூட்டிட்டு வாங்க… தமிழக பா.ஜ.க-விடம் கடுகடுத்த டெல்லி!

இதனால் தி.மு.க-வில் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் நபர்கள் யார் யார் எல்லாம் என்று நூல் விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறதாம் பா.ஜ.க. அமைச்சர் பதவி, சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டு என்று ஏதாவது ஒரு வகையில் முக்கிய பிரமுகர்களை இழுத்துவிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள ஓ.பி.எஸ்-ஐ பா.ஜ.க பக்கம் அழைத்து வருவது பற்றியும் பேச்சு உள்ளது. தி.மு.க-வில் இருந்து டி.ஆர்.பாலுவை ஈஸியாக இழுத்துவிடலாம் என்று நினைத்திருந்தனர். அதற்குள்ளாக அவருக்குப் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வேறு யாரை இழுப்பது என்று விவாதித்து வருகிறதாம் பா.ஜ.க வட்டாரம்.