மேற்கு வங்க கவர்னர் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மேற்கு வங்க கவர்னர் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் மத்திய அரசின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கவர்னர் ஜகதீப் தங்கர் பல முறை வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அண்மையில் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்டது, பா.ஜ.க-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் என வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது.

மேற்கு வங்க கவர்னர் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஜகதீப் தங்கர்

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு மிகப்பெரிய சவால் தேர்தல் தொடர்பான மேற்கு வங்கத்தின் இமேஜ். ஆனால் 2021 மாநில சட்டப்பேரவை தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், அச்சமற்றதாகவும் இருக்கும் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் செய்ய நான் ஒரு கட்சி அல்ல என்று தெரிவித்து இருந்தார்.

மேற்கு வங்க கவர்னர் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பிருந்தா காரத்

மேற்கு வங்க கவர்னரின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பிருந்தா காரத் கூறியதாவது: மேற்கு வங்க கவர்னர் இந்திய தேர்தல் ஆணையராகி விட்டாரா?. கவர்னரை பா.ஜ.க. நியமனம் செய்துள்ளது. அவர் (கவர்னர்) மத்திய அரசின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இது கூட்டாட்சி அமைப்பு மற்றும் கவர்னர் பதவியை உண்மையில் அதிர்ச்சியூட்டும் மற்றும் வெட்கக்கேடான மீறலாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.