வடகிழக்கு டெல்லி கலவரம்.. போலீஸ் குற்றப்பத்திரிகை ஒரு ஏமாற்று அறிக்கை.. பிருந்தா காரத் ஆவேசம்

வடகிழக்கு டெல்லி கலவரம்.. போலீஸ் குற்றப்பத்திரிகை ஒரு ஏமாற்று அறிக்கை.. பிருந்தா காரத் ஆவேசம்

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஒரு ஏமாற்று அறிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் வரை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரியில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் பலியாகினர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக அண்மையில் டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வடகிழக்கு டெல்லி கலவரம்.. போலீஸ் குற்றப்பத்திரிகை ஒரு ஏமாற்று அறிக்கை.. பிருந்தா காரத் ஆவேசம்
பிருந்தா காரத்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டெல்லி காவல்துறையினர் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். நான் சொல்கிறேன் இது ஒரு குற்றப்பத்திரிகை அல்ல, இது ஒரு ஏமாற்று அறிக்கை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்கீழ் டெல்லி போலீஸ் வாயிலாக மத்திய அரசு இந்திய மக்களை ஏமாற்றுகிறது.

வடகிழக்கு டெல்லி கலவரம்.. போலீஸ் குற்றப்பத்திரிகை ஒரு ஏமாற்று அறிக்கை.. பிருந்தா காரத் ஆவேசம்
கபில் மிஸ்ரா

மத கலவரத்துக்கு காரணமாக கபில் மிஸ்ரா போன்றவர்கள் அந்த குற்றப்பத்திரிகையில் நல்லவர்களாக கருதப்படுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய எங்களை போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள், அரசியலமைப்பு எதிரானவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். எங்கள் மீது குற்றச்சாட்டு விதிக்கப்படுகிறது. எனவே இது மக்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.