லெபனான் குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஒரு மணமகள் -திருமண உடையில் ஓடும் திகிலூட்டும் காட்சி-சமூக ஊடகத்தில் வைரலான வீடியோ .

 

லெபனான் குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஒரு மணமகள் -திருமண உடையில் ஓடும் திகிலூட்டும் காட்சி-சமூக ஊடகத்தில் வைரலான  வீடியோ .

லெபனான்நாட்டின் பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்தனர் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான இந்த வெடிப்பின் திகிலூட்டும் காட்சிகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன.

லெபனான் குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஒரு மணமகள் -திருமண உடையில் ஓடும் திகிலூட்டும் காட்சி-சமூக ஊடகத்தில் வைரலான  வீடியோ .
இதனால் லெபனான் அரசாங்கம் இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்துள்ளது. 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக எவ்வாறு சேமிக்க முடிந்தது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது .

 

இந்நிலையில் அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது ஒரு மணமகள் தன்னுடைய திருமண உடையில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார் .அப்போது திடீரென இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததும் அந்த பெண் அதிர்ச்சியடைந்து ஓடுகிறார் .கட்டிடங்கள் குலுங்கி இடிகிறது ,ஒரே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.புகைப்படக் கலைஞர் மஹ்மூத் நக்கீப் தனது கேமராவில் படம்பிடித்த அந்த மணமகள், வெள்ளை நிற சரிகையுடன் கூடிய திருமண உடையில் அலங்காரத்துடன் இருக்கிறார் . அப்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பால் ஆம்புலன்ஸ் சைரன்களின் சத்தத்துடன் , இடிபாடுகளில் சிக்கி கண்ணாடிகள் உடையும் சத்தத்தையும் இந்த வீடியோவில் கேட்கலாம். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி பலரின் வயிற்றை கலக்கி வருகிறது .

லெபனான் குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஒரு மணமகள் -திருமண உடையில் ஓடும் திகிலூட்டும் காட்சி-சமூக ஊடகத்தில் வைரலான  வீடியோ .