தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் கடன்.. நகை கடன் வாங்குபவர்கள் ஹேப்பி… வங்கிகளுக்கு ரிஸ்க்…

 

தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் கடன்.. நகை கடன் வாங்குபவர்கள் ஹேப்பி… வங்கிகளுக்கு ரிஸ்க்…

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில், வங்கியில் தங்க நகை கடனுக்காக கடன் வழங்கும் விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்தியது. அதாவது, 2021 மார்ச் 31ம் தேதி வரை, வாடிக்கையாளர் அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் அளவுக்கு வங்கிகள் நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கு முன் நகையின் மதிப்பில் 75 சதவீதத்தைதான் வங்கிகள் கடனாக வழங்கின.

தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் கடன்.. நகை கடன் வாங்குபவர்கள் ஹேப்பி… வங்கிகளுக்கு ரிஸ்க்…

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, தங்கநகை கடனுக்கு முன்பே விட கூடுதல் பணம் கிடைக்கும் என்பது சாதகமான மற்றும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அதேசமயம் இதனால் வங்கிகளுக்கு கூடுதல் அபாயம் உள்ளதாக தகவல். இது தொடர்பாக பிரிக்ஒர்க் ரேட்டிங்ஸ் இயக்குனர் வைத்யநாதன் ராமசுவாமி கூறுகையில், முன்பே காட்டிலும் கூடுதலாக நகையின் மதிப்பில் கடன் வழங்க வேண்டுமானால் வங்கிகளுக்கு கூடுதல் நிதி தேவை.

தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் கடன்.. நகை கடன் வாங்குபவர்கள் ஹேப்பி… வங்கிகளுக்கு ரிஸ்க்…

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வரும் தங்கத்தின் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டாலோ அல்லது நகை கடன் வாங்கியவரின் திரும்ப செலுத்தும் திறன் பலகீனம் அடைந்தால் வங்கிகளின் மீட்டெடுப்பு மற்றும் சொத்து தரத்தை இது மோசமாக பாதிக்கும். இருப்பினும், அடுத்த மார்ச் மாதம் வரை மட்டும்தான் நகையின் மதிப்பில் 90 சதவீதம் கடன் வழங்கப்படும் என்பதால் இந்த பிரிவில் வங்கிகளுக்கு ரிஸ்க் குறிப்பிட்ட அளவில் இருக்கும். மேலும் நகை கடன்கள் பெரும்பாலும் 2 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலானது. மேலும் இந்திய ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், வங்கிகள் இந்த நிதியாணில் தங்க நகை அடமானத்துக்கு எதிரான கடன்களில், வங்கி சாராத நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு பெரிய சந்தை பங்கை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என தெரிவித்தார்.