பிறந்த குழந்தைகளுக்கு ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால்!

 

பிறந்த குழந்தைகளுக்கு ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால்!

குழந்தைப் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது. தாயின் வயிற்றில் கருவாக உருவாகி மண்ணில் அடியெடுத்து வைக்கும் பருவம் இந்த குழந்தைப் பருவம். எந்த நேரத்தில் எந்தெந்த உணவுகளை எப்படியெல்லாம் கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். குழந்தையின் தேவையறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.

பிறந்த குழந்தைகளுக்கு ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால்!
டீனா அபிஷேக்
வாழ்க்கையின் மிக முக்கியமான இந்தப் பருவத்தில் பெற்றோர் மிக கவனமாக இருக்க வேண்டும். எனவே, குழந்தை நலன் விஷயத்தில் பெற்றோர் எப்படி செயலாற்றுவது என்பது குறித்து குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர் டீனா அபிஷேக் நம்மிடம் பேசவிருக்கிறார். இன்று மட்டுமல்ல வாரம்தோறும் அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வார். இதோ… அவர் நம்மிடம் பேசுகிறார்….

பிறந்த குழந்தைகளுக்கு ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால்!“உணவு ஒவ்வொரு ஜீவராசிகளின் வாழ்விலும் மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதர்களின் வாழ்வியலில் முக்கிய அங்கமாக உள்ளது. அத்தகைய உணவை பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பிறகு முதன்முதலாக அறிமுகப்படுத்துவது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப் பெரிய கொண்டாட்டம். பால் குடிக்கும் குழந்தை உணவு உண்பதை ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடி மகிழ்வதுண்டு.

ஊட்ட உணவு:
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய வகுப்புகளுக்கு வரும் தாய்மார், பல்வேறுவிதமான சந்தேகங்கள் கேட்பார்கள். `மேடம், குழந்தைக்கு என்ன மாதிரியான உணவைக் கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது, எப்படிக் கொடுப்பது’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். ஒரு குழந்தையின் உடல், எப்போது உணவை ஏற்றுக் கொண்டு செரிக்கும் திறன் அடையும் என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

குழந்தையின் உணவு மண்டலம் பிறந்ததிலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் செரிக்கும் திறன் இருக்காது. அதனால்தான் 180 நாட்கள் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுப்பது குழந்தையின் உணவு மண்டலத்துக்கு ஏற்றதல்ல. இதுதொடர்பாக எல்லோருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால்!உரை மருந்து:
சிலர் குழந்தைகளுக்கு உரை மருந்து, கிரைப் வாட்டர், வசம்பு, பசும் பால் குறிப்பாக தண்ணீர் என மாறி மாறிக் கொடுப்பார்கள். இதெல்லாம் தேவையே இல்லை. உரைமருந்து கொடுக்காவிட்டால் குழந்தைக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினை வரும் என்று சிலர் நினைப்பார்கள். தாய்ப்பால் ஒன்றே போதும்; அது மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்.

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து, உலகத்தில் எந்த உணவிலும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, குறைந்தது இரண்டு வருடமாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.எனவே, குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தாய்ப்பால் 88 சதவீதம் தண்ணீர் நிறைந்திருக்கிறது. ஆகவே 180 நாட்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது அவசியம்.

திட உணவு:
ஆறு மாதங்களுக்கு முன் தாய்ப்பாலைத் தவிர வேறு ஏதும் கொடுத்தால் என்னாகும் என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். `என்னுடைய அம்மா எனக்கு அப்படித்தான் கொடுத்தார், நான் ஏன் என் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது’ என்றெல்லாம் கேட்பார்கள். நம்மில் பலர் இன்றைக்கு பல்வேறு வயிற்று உபாதைகளோடும், சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் பல்வேறு நோய்களில் சிக்கியிருக்க இதுபோல் தவறான முறையில் உணவு கொடுத்ததும் முக்கியமான காரணமாகும்.

ஒரு குழந்தைக்கு, திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் முன் மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
1. குழந்தை பிறந்து 180 நாட்கள் முடிவடைந்திருக்க வேண்டும்.
2. குழந்தை நம் உதவியுடன் உட்கார வேண்டும்
3. உணவினை வெளியே செலுத்தாமல் உள்ளே எடுக்க வேண்டும். (Loosing Tongue Thrust என ஆங்கிலத்தில் கூறுவோம்)

பிறந்த குழந்தைகளுக்கு ஈடு இணையற்ற உணவு தாய்ப்பால்!சத்தான உணவு:
ஒரு குழந்தைக்கு எந்த பதத்தில் உணவு கொடுக்க வேண்டும் என்பதே பலருக்குத் தெரிவதில்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு எப்படி திட உணவு அறிமுகம் செய்யவேண்டும்? எந்த பதத்தில் கொடுக்கவேண்டும்? அதில் உள்ள கலோரி கணக்குகள் என்ன? எந்தெந்த உணவில் என்ன இருக்கிறது? என்பதுபோன்ற தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான உணவை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்துங்கள். குழந்தையின் உடல்நலம் சிறக்கட்டும்”.
(மீண்டும் சந்திப்போம்)