Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் தாய்ப்பால்... உன்னதமிக்க மாமருந்து!

தாய்ப்பால்… உன்னதமிக்க மாமருந்து!

தாய்ப்பால்… ஈடு இணையற்ற உன்னதமான மாமருந்து, இதுவரை இதற்கு ஈடாக அல்லது மாற்றாக ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஜீவராசிகள் அனைத்தும் தனது வாரிசுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இறைவனால் படைக்கப்பட்டது தாய்ப்பால். இதன் உன்னதம் தெரியாமல் மனிதர்களில் பலர் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டாமல் தவிர்ப்பது வேதனை.

தாய்ப்பால்... உன்னதமிக்க மாமருந்து!

தாய்ப்பால்... உன்னதமிக்க மாமருந்து!சத்துகள்:
குழந்தை பிறந்ததும் குறைந்தது ஐந்து மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வைட்டமின், தாதுச்சத்துகள் நிறைந்த தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளரும் குழந்தைகள் கொழுகொழுவென்று வளரும். அத்தனை ஊட்டம் நிறைந்தது தாய்ப்பால் என்பதை தாய்மார் அனைவரும் உணரவேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டங்களில் தூய்மையான மனதுடன் குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும். கோபம், ஆத்திரத்துடன் இருக்கும் நேரங்களில் பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பது குறைவதுடன் குழந்தைகளின் மனநிலை மாறவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, குழந்தைக்கு பாலூட்டும்போது தாயானவள் நிதானமாக உட்கார்ந்துகொண்டு அமைதியான நிலையில் புகட்ட வேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது வேறு ஏதாவது வேலை இருக்கிறது என்று பாதியில் எழுந்து போகக்கூடாது. ஆசை ஆசையாக குழந்தை பால் அருந்தும்போது திடீரென நிறுத்தினால் அந்தக் குழந்தை ஏக்கத்துக்கு உள்ளாகும். குழந்தையின் மனநிலையிலும், நரம்புகளிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதால் கவனம் தேவை.

தாய்ப்பால்... உன்னதமிக்க மாமருந்து!

உறவு வலுப்பெறும்:
தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும் சேய்க்குமான உறவு வலுப்பெறும். மேலும் குழந்தையின் மனநிலையில் எல்லையில்லா இன்பம் ஏற்படும். ஆகவே, இதன் பொருள் அறிந்து ஒவ்வொரு தாய்மாரும் செயல்பட வேண்டும். ஆனால், இன்றைக்கு நாகரிகம் என்ற பெயரில் பல பெண்கள் தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்க்கின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயின் உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து மார்பகம் நோக்கி ரத்தம் பாயும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

தாயின் மார்பில் குழந்தை முட்டி மோதி பால் குடிப்பதால் குழந்தைப்பேற்றின்போது விரிந்த கருப்பை மெதுவாக சுருங்கத் தொடங்கும். இயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வு தாய்ப்பால் கொடுப்பதால் நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்காவிட்டால் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

தாய்ப்பால்... உன்னதமிக்க மாமருந்து!
சிகிச்சை:
குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்று சில பெண்கள் வருத்தப்படுவார்கள். இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காது. ஆனால், இயற்கை மருத்துவத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன். உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்வது, பப்பாளிக்காயை சமைத்துச் சாப்பிடுவது, வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரை அருந்துவது போன்றவற்றால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

தாய்ப்பால்... உன்னதமிக்க மாமருந்து!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி முதலில்...

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ்...

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் வெறுத்த 11ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews