#BREAKING ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

 

#BREAKING  ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

#BREAKING  ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

கடந்த அதிமுக அரசு பிப்ரவரி மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இந்த ஆண்டு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். கடந்த மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையின் 16 வது கூட்டத் தொடரை நடத்தியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான நன்றி மற்றும் விவாதம் நடைபெற்று ஜூன் மாதம் 24ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.அத்துடன் தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், வேளாண்மைக்கு முதல் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

#BREAKING  ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்ஜெட் தாக்கல் குறித்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அலுவலர்களுடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வென்று புதிய ஆட்சி அமைந்ததை அடுத்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட் உடன் விவசாய பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பட்ஜெட் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.