Home சினிமா BREAKING: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ! 

BREAKING: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ! 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின்  போட்டியாளர் குறித்த முழு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

BREAKING: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ! 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின்  போட்டியாளர் குறித்த முழு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ளது. கடந்த இரண்டு சீசன் போல் இதையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் சற்று போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
அதற்கு ஏற்றார் போல் இந்த முறை பிக் பாஸ் வீட்டின் செட்டப்பும் சற்று வித்தியாசமாக மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த முறை போட்டியில் இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டே இருக்கிறது. 

இந்த நிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அவை கீழ் வருமாறு…. 

 பவர் ஸ்டார்:

கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். பின்பு படங்களில் நடிக்காமல் அரசியலில் களமிறங்கிய இவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு ஆயிரத்துக்கும் குறைவாக வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். மேலும் இவரை கடந்த இரண்டு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி அழைத்தது குறிப்பிடத்தக்கது.  
 

power star

 

சாண்டி:

டான்ஸ் மாஸ்டர் கலாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சாண்டி. பின்பு தனது தனித்திறமையால் முன்னுக்கு வந்த இவர் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி பிரபலமடைந்தார். மேலும் இதற்கு முதல் சீசனில் இவருடைய முதல் முதல் மனைவி காஜல் போட்டியாளராகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

sandy

 சாக்ஷி அகர்வால்:

‘காலா’ படத்தில் ரஜினியின்  மருமகளாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார். படம் வாய்ப்புகள் இல்லதா காரணத்தினால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

sakshi agrwal

வனிதா விஜயகுமார் 

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றம் வரை சென்று மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் ஒரு முறை பத்திரிக்கையாளரிடம் சண்டை போட்டதையும் யாராலும் எளிதில் மறக்க முடியாது. ஆதலால் பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக ஒரு பெரிய சண்டையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.  

vanitha

 

 அபிராமி ஐயர் 

டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், மாடலாகவும் வலம் வந்தவர் அபிராமி ஐயர். தமிழில் ஒரு சில படங்களில் தலை காட்டி வந்த இவர் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

abirami

 மதுமிதா 

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

madhu

 

மோகன் வைத்யா 

கடந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதனுக்கு பதிலாக இந்த முறை பிரபல கர்நாடக பாடகர் மோகன் வைத்யா களமிறங்கவுள்ளார். 

மோகன் வைத்யா 

ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதை தொடர்ந்து விசில்,ஜெயா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களின் நடித்த இவர் சமீப காலமாக படங்களில் வாய்ப்பு இல்லாமல் தவிர்த்து வருகிறார். அதனால் தனது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. 

sherin

கவின்: 

kavin

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகர் கவின். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான நட்புனா என்னானு தெரியுமா படத்தில் நடித்துத்திருந்தார். இவரும் படங்களின் வாய்ப்பு கிடைக்காததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. 

 

சேரன்:

 

சேரன்

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான இவர், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவரின் வெற்றிக்கொடிக்கட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் அமைதியாய் வாழ்ந்து வந்த, இயக்குநர் சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளார். 

பாத்திமா பாபு:

 

fathima babu

தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிகையாகவும், தூர்தஷன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராகவும் ஜொலித்தவர். மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஜெயலலிதா இருந்த காலத்தில்  அதிமுகவில் தலைமை பேச்சாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது வீட்டிலிருக்கு இவர் பொழுதுபோக்குக்காக பிக்பாஸ் இல்லத்திற்குள் செல்கிறாராம். 

தர்ஷன்:

தர்சன்

தும்பா ,கணா படங்களில் நடித்திருக்கும் இவர் புதுப்பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் இவருக்கு பிக்பாஸ்ஸில் இடம் கிடைத்துள்ளது. 

பருத்திவீரன் சரவணன்:

 

சரவணன்

 பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்த காமெடி நாயகன் தான் சரவணன். கடைக்குட்டி சிங்கம் படத்திலும் கார்த்திக்குடன் மீண்டும் கைக்கோர்த்தார். கடந்த ஆண்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது நலமுடன் இருந்தும் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸ்- ஐ நம்பி 100 நாட்கள் வருகிறாராம். 

முகேன் ராவ்:

 

Mugen Rao

மலேசியாவைச் சேர்ந்த கலைஞர் முகேன் ராவ்தான். மலேசியாவில் பாடகராவும், மேடை நிகழ்ச்சிகளில் படைப்பாளராகவும் வலம் வந்தவர். மேலும் யூடியூப் வழியாகவும் பல பாடல்களை இசைத்துறைக்கு அற்பணித்துள்ளார். இவர்தான் தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல் மலேசியவராவர். அந்த பெருமைக்காகவோ என்னவோ பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்துவைக்கிறார். 

 

சாந்தினி தமிழரசன்:

பாக்யராஜ் நடித்த சித்து பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தெலுங்கு மொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னை, எத்திராஜ் கல்லூரியில் படித்த இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை அழகிப்போட்டியில் பங்கேற்றார். ஆனால் வெற்றிப்பெறவில்லை… வாழ்வில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவோ என்னவோ பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்

சாந்தினி

BREAKING: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“அரசு மரியாதையுடன் மறைந்த எழுத்தாளர் கி.ரா. உடல் நல்லடக்கம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக...

இந்தியாவில் குறையும் கொரோனா : ஒரேநாளில் 4.22 லட்சம் பேர் குணமாகினர்!

இந்தியாவில் ஒரேநாளில் 2,63,533 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 2,63,533 பேருக்கு கொரோனா இருப்பது...

சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞர்….கைது செய்த போலீஸ்!

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி. 30 வயதான இவருக்கு அதேபகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி லலிதாக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த சிறுமிக்கு...

“10 வயதில் தந்தையை இழந்தேன்; 80 வயதில் எனது ஞானதந்தையை இழந்துள்ளேன்” நடிகர் சிவக்குமார் உருக்கம்!

பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா...
- Advertisment -
TopTamilNews