’கருணாநிதி பெயரில் புதுச்சேரி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்’ மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

’கருணாநிதி பெயரில் புதுச்சேரி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்’  மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் பெயரில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிவித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் நாராயணசாமி, தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும்.

’கருணாநிதி பெயரில் புதுச்சேரி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்’  மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை வழங்கப்படும். இந்தத் திட்டம் நவம்பர் 15 –ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார்.

மதிய உணவுத் திட்டம் என்பது நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியா முழுக்கவும் மதிய உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கும் காலை சிற்றுண்டு திட்டத்தைப் பலரும் பாராட்டி வரவேற்கிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருக்கிறார்.

’கருணாநிதி பெயரில் புதுச்சேரி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்’  மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அதில், ’கலைத் தொண்டு மூலமாக ‘கலைஞர் கழகம்’ வளர்த்த புதுவையில் ‘புரட்சி முதல்வர்’ திரு. நாராயணசாமி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது. திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க! என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.