மாஸ்க் அணியாவிட்டால் ரூ.29,000 அபராதம்! அதிபருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

 

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.29,000 அபராதம்! அதிபருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரேசில் அதிபர் போல்ஸ்னாரோ பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளொன்றுக்கு 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கும் பிரேசிலில் கொரோனா பாதிப்புகளை சரிவர கையாளவில்லை என்று அதிபர் போல்ஸ்னாரோ மீது கடும் விமர்சனம் உள்ளது. இந்நிலையில், அவர், பொது இடங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் முககவசம் அணியாமல் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தொற்றை தடுக்க அங்கு கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிபரின் போக்கு பலருக்கு தவறான முன் உதாரணமாக இருப்பதாக சாவ் பாவ்லோ ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.29,000 அபராதம்! அதிபருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் பொதுவெளியில் வரும்போது அதிபர் போல்ஸ்னாரோ கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால், நாள் ஒன்றுக்க இந்திய மதிப்பில் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உத்தரவு தலைநகரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது