Advertisementநண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!
Home உலகம் நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!

நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!

மனிதர்கள் எப்போதும் விசித்திரமானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விசித்திரம் ஒளிந்திருக்கும். அந்த விசித்திரங்களைச் செய்யவதற்காகவே புறக்காரணிகளால் தூண்டப்படுவார்கள். மனிதர்களுக்கு இருக்கும் தலையாய பிரச்சினையே உறவுச்சிக்கல் தான். குட்டிக்கரணம் அடித்தாலும் சம்மர்சால்ட் அடித்தாலும் விடாது கருப்பாக நம்மை துரத்திக்கொண்டே தான் இருக்கும். விரக்தியின் உச்சத்திற்கே கொண்டுசெல்ல கூடியது. அந்த விசித்திரங்கள் செய்ய தூண்டும் புறக்காரணிகளில் இந்த உறவுச்சிக்கலும் அடக்கம்.

நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!
நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!

பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி அந்த விசித்திரமான செயலை நிகழ்த்தியிருக்கிறார். தன் வாழ்வில் பல முறை காதல் பிரேக்அப்களை சந்தித்த கிரிஸ் கேலரா என்ற மாடல் இதுக்கு மேல் முடியாதுடா சாமி என்று தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது தன்னை தானே அவர்திருமணம் செய்து கொண்டுள்ளார். 33 வயதான கிரிஸ் கேலராவுக்கு பல ஆண்களுடன் பல்வேறு காலக்கட்டங்களில் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் ஒரு காதல் கூட அவருடன் நிலைக்கவில்லை. அனைத்தும் முறிந்துள்ளது. இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற கிரிஸ் தன்னை தானே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

Model with £72k boobs struts topless through the streets for 'Free the Nipple'

அதன்படி கிரிஸ் கேலராவின் திருமணம் அவரது பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக கிரிஸ் கூறுகையில், “நான் எப்போதும் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போது அதனை நானே தேர்ந்தெடுத்துள்ளேன். நானே என்னை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். என்னை நானே காதலிக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன். இதை உணர்ந்த நிலையில் கொண்டாட முடிவு செய்தேன். என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். இது அற்புதமான நிகழ்வு. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நான் கண்டுகொள்ளப் போவதில்லை” என்றார்.

நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட விசித்திர பெண்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

தமிழக ஆளுநராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துப் பேசினார்.

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...
TopTamilNews