பிரேசில் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது! #Corona

 

பிரேசில் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது! #Corona

அக்டோபர் 05-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்து 250 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 66 லட்சத்து 23 ஆயிரத்து 510 நபர்கள்.

பிரேசில் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது! #Corona

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 41 ஆயிரத்து 824 பேர்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 77,33,916 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 76,36,912 பேரும், இந்தியாவில் 66,36,815 பேரும், பிரேசில் நாட்டில் 49,15,289 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பிரேசில் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது! #Corona

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 34,066 பேரும், பிரேசிலில் 8,456 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 74,767 பேராக அதிகரித்துள்ளனர். இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது.

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் 332, பிரேசிலில் 364, இந்தியாவில் 902 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,02,714 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

பிரேசில் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது! #Corona

கடந்த சில மாதங்களில் பார்க்கும்போது பிரேசிலில் புதிய நோயாளிகளில் எண்ணிக்கை வெகுமாகக் குறைந்திருக்கிறது. நேற்று 10 ஆயிரத்துக்குள் மட்டுமே எனக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.