பிரேசில் அதிபரை விட்டு போக மறுக்கும் கொரோனா… 3வது முறையும் பாசிடிவ் வந்தது!

 

பிரேசில் அதிபரை விட்டு போக மறுக்கும் கொரோனா… 3வது முறையும் பாசிடிவ் வந்தது!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது கொரோனா பரிசோதனையிலும் கொரோனா பாசிடிவ் என்று வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரேசில் அதிபரை விட்டு போக மறுக்கும் கொரோனா… 3வது முறையும் பாசிடிவ் வந்தது!கொரோனா எல்லாம் பெரிய விஷயமே இல்லை, மாஸ்க் எல்லாம் அணிய மாட்டேன் என்று வீம்பாக கம்பு சுத்தியவர்களுள் ஒருவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10ம் தேதி கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார்.
தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு அவ்வப்போது கொரோனா போய்விட்டதா என்று அறிய பரிசோதனையும் செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேசில் அதிபரை விட்டு போக மறுக்கும் கொரோனா… 3வது முறையும் பாசிடிவ் வந்தது!அதிலும் அவருக்கு கொரோனா இன்னும் போகவில்லை என்று தெரிந்தது. இதனால் மேலும் சில நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு மூன்றாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் கொரோனா அவரை விட்டு விலகவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரேசில் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிபருக்கு மூன்றாவது முறையாக பாசிடிவ் என்று வந்துள்ளது. அதே நேரத்தில் அவர் உடல்

பிரேசில் அதிபரை விட்டு போக மறுக்கும் கொரோனா… 3வது முறையும் பாசிடிவ் வந்தது!

நலனுடன் உள்ளார். தன்னுடைய மாளிகையில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். வீடியோ கான்பரன்ஸிங் முறையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாத் தொற்றில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 22 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் 11 லட்சம் தொற்றுகளுடன் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.