கொரோனா பாதிப்பு: அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறிய பிரேசில்

 

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறிய பிரேசில்

பிரேசிலியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பட்டியலில் பிரேசில் நாடு 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகில் அதிகம் பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இரண்டாவது நாடாக பிரேசில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக ரஷ்யா இரண்டாவது இடத்தில் இருந்தது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.

தென் அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய் 330,890 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் 21,048 பேர் இறந்துள்ளனர். ஆனால் பரிசோதனையின் அடிப்படையில் உண்மையான புள்ளிவிவரங்களின்படி இந்த எண்ணிக்கை 15 மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறிய பிரேசில்

பிரேசிலில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 1,001-ஆக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக 1,000-க்கும் மேற்பட்டோர் பிரேசிலில் இறந்துள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி அமெரிக்காவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 96,000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரேசில் தற்போது உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஜூன் மாதம் பிரேசிலில் கொரோனா பரவல் உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.