சிக்கன் விங்ஸில் கொரோனா இருந்ததற்கான ஆதாரம் எங்கே? – பிரேசிலுக்கு ஆதாரத்தை தராமல் இழுத்தடிக்கும் சீனா

சிக்கன் விங்ஸில் கொரோனா இருந்ததற்கான ஆதாரம் எங்கே? – பிரேசிலுக்கு ஆதாரத்தை தராமல் இழுத்தடிக்கும் சீனா

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கன் விங்ஸில் கொரோனா வைரஸ் இருந்தது என்று சீனா கூறியதற்கு ஆதாரத்தை கேட்டுள்ளது பிரேசில். ஆனால், ஆய்வுக் கூட முடிவுகளை வழங்காமல் சீனா இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரேசில் நாட்டில் இருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி வந்தது. அதை ஆய்வு செய்து பார்த்தபோது கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சீனா தெரிவித்தது. கோழி மூலமாக கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டது.

சிக்கன் விங்ஸில் கொரோனா இருந்ததற்கான ஆதாரம் எங்கே? – பிரேசிலுக்கு ஆதாரத்தை தராமல் இழுத்தடிக்கும் சீனா

இந்த நிலையில் சீனாவின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருந்ததாக சீனா கூறியுள்ளது. இதற்கான ஆய்வ முடிவை நாங்கள் சீனாவிடம் கேட்டுள்ளோம். ஆனால் தர மறுப்பது ஏற்புடையது இல்லை” என்று கூறியுள்ளது.

சிக்கன் விங்ஸில் கொரோனா இருந்ததற்கான ஆதாரம் எங்கே? – பிரேசிலுக்கு ஆதாரத்தை தராமல் இழுத்தடிக்கும் சீனா

மேலும் அந்த அறிக்கையில், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில் நடந்த கூட்டத்தில் பிரேசில் தரப்பில் விவசாய இணைப்பாளர் குழுவினர் பங்கேற்று பேசினர். அப்போது கொரோனா தொற்று உறுதியானது தொடர்பான ஆதாரத்தைக் கேட்டனர். ஆனால் அந்த கூட்டத்தில் சீன தரப்பில் பங்கேற்றவர்களால் அந்த ஆதாரத்தை தர முடியவில்லை. அந்த முடிவுகள் அனைத்தும் குவாங்டாங் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

சிக்கன் விங்ஸில் கொரோனா இருந்ததற்கான ஆதாரம் எங்கே? – பிரேசிலுக்கு ஆதாரத்தை தராமல் இழுத்தடிக்கும் சீனா

ஆய்வக அறிக்கை மற்றும் தொடர்பு தொடர்பான தகவலைப் பெற பிரேசில் தொடர்ந்து சீன நகராட்சி, மாகாண, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டே வருகிறது” என்று கூறியுள்ளது.