வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ1,502 கோடி

வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ1,502 கோடி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ1,501.65 கோடி ஈட்டியுள்ளது.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ1,501.65 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 27.6 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,076.17 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ1,502 கோடி
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.89,687.12 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பாட்டு வருவாயாக ரூ.50,616.92 கோடி ஈட்டியிருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 96.3 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்துள்ளது.

வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ1,502 கோடி
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

கடந்த ஜூன் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த சுத்திகரிப்பு லாப வரம்பு 4.12 டாலராக (ஒரு பேரலுக்கு) உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்றுமுன்தினம் பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.33 சதவீதம் குறைந்து ரூ.463.45ஆக இருந்தது.