ஹோட்டல் Wifi – ல் பாடம் படித்த சிறுவர்கள் – அமெரிக்காவில் வைரல்

 

ஹோட்டல் Wifi – ல் பாடம் படித்த சிறுவர்கள் – அமெரிக்காவில் வைரல்

தெரு விளக்கில் படித்து பெரிய ஆளாக ஆனேன் என்று பலர் பேட்டியில் சொல்லியிருப்பதைப் படித்திருப்போம் ; கேட்டிருப்போம். அதன் நவீன டெக்னிக் வடிவம் அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நாடும் அமெரிக்கா. இன்றைய மாலை நேர நிலவரப்படி 63,10,783 என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை. இதில் 1,90,287 பேர் இறந்துவிட்டனர். இந்நிலையில் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு அதன்மூலம் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கிய செய்திகளைப் படித்திருப்போம்.

ஹோட்டல் Wifi – ல் பாடம் படித்த சிறுவர்கள் – அமெரிக்காவில் வைரல்

அமெரிக்காவில் ஆன்லைன் கல்வி என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. ஆனால், அங்கு எல்லோருக்கும் இது சாத்தியப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஆனால், கற்க வேண்டும் எனும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள டாக்கோ பெல் எனும் நட்சத்திர ஹோட்டலின் வெளியே இரு சிறுவர்கள் சிறிய லேப்டாப்பை வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கு செல்வோம் வித்தியாசமாக அவர்களைப் பார்த்துச் சென்றிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் என்ன செய்கிறீர்கள் என விசாரித்திருக்கிறார். தங்கள் ஹோட்டலின் வைஃபையைப் பயன்படுத்தி படிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். நெகிழ்ந்துவிட்ட அவர், அந்தச் சிறுவர்களை போட்டோ பிடித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.  அது வைராகி எல்லோரும் பகிர்ந்து வருகின்றனர்.