என்னாது ஜெயலலிதாவின் கன்னத்தில் துரைமுருகன் அறைந்தாரா?

 

என்னாது ஜெயலலிதாவின் கன்னத்தில் துரைமுருகன் அறைந்தாரா?

ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படம் இல்லாததையெல்லாம் திரித்துக்கூறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இப்படத்தின் காட்சிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

என்னாது ஜெயலலிதாவின் கன்னத்தில் துரைமுருகன் அறைந்தாரா?

இந்நிலையில் தலைவி படத்தில், 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் நடந்த சில சம்பவங்கள் திரித்து கூறப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில், #boycottThalaivi என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கிவருகின்றனது. அந்த காட்சிகளில், கலைஞர் அருகில் துரைமுருகனாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம், ஜெயலலிதா அம்மையாரிடம் எம்ஜிஆருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறது. பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா முன்னோக்கிவர, துரைமுருகன் கதாபாத்திரம் அவரின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி சேலையை உருவுகிறது. கருணாநிதியாக காட்டப்படும் கதாபாத்திரம், எம்ஜிஆருக்கும் உனக்கும் என்ன தொடர்பு என கொச்சைப்படுத்தும்விதமாக ஜெயலலிதாவை கேட்டதாக படத்தில் காட்டப்பட்டுள்ளது.

என்னாது ஜெயலலிதாவின் கன்னத்தில் துரைமுருகன் அறைந்தாரா?

ஆனால் 1989 இல் நடந்த சட்டசபை நிகழ்வில் முதல்வர் கருணாநிதிக்கு பின்னால் நான்காவது வரிசையில் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அன்று கலவரம் நடக்க காரணம் முதல்வர் நிதிநிலை அறிக்கை வாசிக்கக் கூடாது என்று ஜெயலலிதா தகராறில் ஈடுபடுகிறார். உடனே முதல்வர் கருணாநிதி கையில் இருக்கும் நிதிநிலை அறிக்கை பிடுங்கிய அதிமுகவினர் அதனை கிழித்தெறிந்தனர்.

இதுவே அன்று நடந்த சம்பவம். கருணாநிதி, ஜெயலலிதாவை கொச்சப்படுத்தக்கூடிய எந்த ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. ஆனால் வரலாற்று நிகழ்வை சித்தரித்து, தலைவி படத்தில் கூறப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கிவருகின்றனர்.