விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் – 7 பேருக்கு மறுவாழ்வு தந்த நெகிழ்ச்சி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் – 7 பேருக்கு மறுவாழ்வு தந்த நெகிழ்ச்சி

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் – 7 பேருக்கு மறுவாழ்வு தந்த நெகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த வெங்கடேஸ்வரன்- விஜயலட்சுமி தம்பதியின் மகன் ரோகித் கண்ணா (17) இவர் கடந்த 31 ஆம் தேதி பொள்ளாச்சி-பல்லடம் சாலை விபத்தில் சிக்கினார், இதில் படுகாயமடைந்த ரோகித் சிகிச்சைக்காக கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ரோகித் குடுபத்தினர் முன்வந்தனர்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் – 7 பேருக்கு மறுவாழ்வு தந்த நெகிழ்ச்சி

இதையடுத்து ரோகித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பின்னர், கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் கே.ஜி மருத்துவமனை நோயாளிகளுக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கும் , இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் தானமாக அளிக்கப்பட்டது. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.