கட்டுவிரியன் பாம்பை கடித்து விழுங்க முயன்ற சிறுவன்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 

கட்டுவிரியன் பாம்பை கடித்து விழுங்க முயன்ற சிறுவன்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

உத்திரபிரதேச மாநிலத்தில் கட்டுவிரியன் பாம்பை பல்லால் கடித்து விழுங்க முயன்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் இருக்கும் போலாப்பூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தனது அம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவனது அம்மா, சற்று தொலைவே சென்றவுடன் அங்கே ஊர்ந்து கொண்டு வந்த சிறிய கட்டுவிரியன் பாம்பை பிடித்து கையில் எடுத்துள்ளார். பின்னர் அதனை பல்லால் கடித்து விழுங்க முயன்றுள்ளார்.

கட்டுவிரியன் பாம்பை கடித்து விழுங்க முயன்ற சிறுவன்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது தாயார், சிறுவன் கையில் இருந்த பாம்பை பிடுங்கி தூக்கி வீசிய பின்னர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு மருத்துவர்கள் எந்த வகை பாம்பை விழுங்க முயன்றார் என கேட்க, கட்டுவிரியன் குட்டி என சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அந்த பாம்பு கொடிய வகை விஷம் கொண்ட பாம்புகளுள் ஒன்று என தெரிவித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு விஷ எதிர்ப்பு ஊசி போட்டு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.