பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு எளிய இலக்கு! கோஹ்லி, ரோகித் ஆட்டமிழந்து தடுமாறும் இந்தியா! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு எளிய இலக்கு! கோஹ்லி, ரோகித் ஆட்டமிழந்து தடுமாறும் இந்தியா!

virat
virat

2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் அடித்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டி20 போட்டி, ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

guptill

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு கப்டில் மற்றும் முன்றோ இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய கப்டில் 20 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முன்றோ 25 பந்துகளில் 26 ரன்கள் அடித்து வெளியேறினார்.

சென்ற போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்டமிழந்த கேப்டன் வில்லியம்சன் 14 ரன்களுக்கும், ஆல் ரவுண்டர் க்ராந்தோம் 3 ரன்களுக்கும் வெளியேற 81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நியூசிலாந்து தடுமாற்றம் கண்டது.

taylor

இறுதி கட்டத்தில் டெய்லர் மற்றும் செய்பர்ட், இருவரின் சற்று நிலைத்து ஆடி அணிக்கு றன் சேர்த்தனர். டெய்லர் 18 ரன்களும் செய்பர்ட் 33 ரன்களும் அடித்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். துபெ, பும்ராஹ், தாக்கூர் மூவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

viat

அடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு கோஹ்லி மற்றும் ரோகித் இருவரும் ஆட்டமிழக்க, 39 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.