‘திருமணத்தை மீறிய உறவு’ – உல்லாச வீடியோக்களை காட்டி பெண்ணை மிரட்டிய முதலாளி கைது!

 

‘திருமணத்தை மீறிய உறவு’ – உல்லாச வீடியோக்களை காட்டி பெண்ணை மிரட்டிய முதலாளி கைது!

கோவையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், குடும்ப சூழல் காரணமாக அவர் சிட்கோ பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு பணியாற்றி வந்த சந்திரன் (40) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாற, இருவரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் அறை எடுத்து தனிமையில் இருந்துள்ளனர்.

‘திருமணத்தை மீறிய உறவு’ – உல்லாச வீடியோக்களை காட்டி பெண்ணை மிரட்டிய முதலாளி கைது!

பணியிடத்திலும் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் சந்திரனுடன் பேசவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், இருவரும் தனிமையில் இருந்த போது எடுத்து வைத்திருந்த வீடியோ காட்சிகளை காட்டி குடும்பத்தினரிடம் காட்டி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். மேலும், தன்னுடன் மீண்டும் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் நிர்பந்தித்திருக்கிறார்.

‘திருமணத்தை மீறிய உறவு’ – உல்லாச வீடியோக்களை காட்டி பெண்ணை மிரட்டிய முதலாளி கைது!

சந்திரனின் டார்ச்சரை தாங்க முடியாத அந்த பெண் கோவை காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், சந்திரனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து வீடியோக்கள் அனைத்தையும் அழித்துள்ளனர்.