பாம்பான் பாலத்தை கடந்துசென்ற எல்லைப்பாதுகாப்பு கப்பல்கள்

பாம்பான் பாலத்தை கடந்துசென்ற எல்லைப்பாதுகாப்பு கப்பல்கள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்பாலத்தை புதிதாக தயாரிக்கப்பட்ட 2 எல்லைப் பாதுகாப்பு கப்பல்களும், சுற்றுலா படகு ஓன்றும் கடந்த சென்றன.

பாம்பான் பாலத்தை கடந்துசென்ற எல்லைப்பாதுகாப்பு கப்பல்கள்

மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்க தேசத்திற்கும் இடையிலான நீர்வழி பகுதியை கண்காணிக்க, கோவாவில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு புதிதாக 2 பாதுகாப்பு கப்பல்கள் தயாரிக்கப்பட்டது. அந்த இரண்டு புதிய கப்பல்களும் இன்று மன்னார்வளைகுடா கடல் வழியாக பாம்பன் பாலம் மற்றும் ரயில் பாலத்தை கடந்து பாக்ஜலசந்தி கடல் வழியாக கொல்கத்தாவிற்கு சென்றது.

பாம்பான் பாலத்தை கடந்துசென்ற எல்லைப்பாதுகாப்பு கப்பல்கள்

இதேபோல் கேரள மாநிலம் கொல்லத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட சுற்றுலா படகு ஒன்று, வாரணாசி நீர்வழிப் போக்குவரத்திற்காக பயணிகளை ஏற்றிச்செல்ல பாம்பன் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி வழியாக வாரணாசி நோக்கி சென்றது. இந்த கப்பல்கள் செல்வதை பாம்பன் பாலத்தில் மேல் நின்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.