பண்டிகைக் கால 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!

 

பண்டிகைக் கால 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!

தீபாவளி, நாவராத்திரி பண்டிகைகளுக்காக இயக்கப்பட உள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

தீபாவளி, ஆயுதபூஜை, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதாவது, கயாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்.15, நவ. 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் அதிவிரைவு சிறப்பு ரயிலும், எழும்பூரில் இருந்து கயாவிற்கு அக்.27, நவ.3, 10, 17, 24, டிச.1 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

பண்டிகைக் கால 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!

அதே போல, புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு அக்.20, 27, நவ.3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வருக்கு அக்.21, 28 நவ. 4, 11, 18 , 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் யஷ்வந்த்பூா்-கன்னூா், செகந்திராபாத்-திருவனந்தபுரம், பாரவூனி-எா்ணாகுளத்திற்கும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் இன்று காலை 8 மணியில் இருந்து தொடங்கியுள்ளது.