• March
    31
    Tuesday

Main Area

Main



பொது இடத்தில் இப்படி நடந்துக்கலாமா: ஸ்ரீதேவி கணவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வீடியோ

ஊர்வசி ரவுட்டேலா - போனி கபூர்
ஊர்வசி ரவுட்டேலா - போனி கபூர்

பாலிவுட் தயாரிப்பாளர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஒரு விழாவில் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பின்புறம் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

urvashi

முன்னாள் பிரபஞ்ச அழகி ஊர்வசி ரவுட்டேலா, சுதந்திர புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு விழாவில் போனி கபூர் உடன் இணைந்து போஸ் கொடுத்தார். அப்போது கேமராவில் பதிவான விஷயம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்த போனி கபூர், ஊர்வசியின் பின்புறம் தட்டினார். அதற்கு ஊர்வசி எதுவும் ரியாக்ட் செய்யவில்லை, இயல்பாக இருந்தார். ஆனால் நெட்டிசன்கள் விடுவதாய் இல்லை, தெரியாமல் செய்திருந்தாலும் போனியின் செயல் தவறு என விமர்சித்து வருகின்றனர்.

பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாதா?, ஊர்வசி ஏன் அவர் கன்னத்தில் அறையவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: திரைமொழி இயக்குனரே சென்று வாருங்கள் அய்யா: கவிஞர் அறிவுமதி

2018 TopTamilNews. All rights reserved.