வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? : லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

 

வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? : லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

தல அஜித்தின் 60 ஆவது படமான வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் நடிகர் அஜித், இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் தள்ளிப்போன இந்த படத்தின் ஷூட்டிங், மீண்டும் தொடங்கியிருக்கிறது.

வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? : லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

அண்மையில் நடிகர் அஜித்தின் பைக் ரேஸ் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் ஷூட்டிங் நடைபெறவிருப்பதால் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் கசிந்தது. ஏப்ரல் மாதம் வலிமை ரிலீசாகிவிடும் என காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்தது. படத்தின் அப்டேட் ஏதேனும் இருக்கிறதா? என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘வலிமை ஃபர்ஸ்ட்லுக்’.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை சிறப்பாக விரைவில் வெளியிட பணியாற்றி வருகிறோம்.. பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.